பவுஞ்சூர், : பவுஞ்சூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன், 23.
இவர், தன் நண்பர் லோகேஷ், 21, உடன், சொந்த வேலைக்காக, நேற்று கூவத்துார் சென்று, யமாஹா ஆர்15 இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பி உள்ளார்.
வீரராகவபுரம் சாலை சந்திப்பு அருகே, திடீரென சாலையில் மாடு குறுக்கே வந்ததால், மாட்டின் மீது மோதி, நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில், குமரேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற அணைக்கட்டு போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.