புதுச்சேரி : வெஸ்ட்மெட் மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் இணைந்து இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் புதுச்சேரியில் நடந்தது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நடந்த முகாமில், இலவச ரத்த யூரியா அளவு பரிசோதனை, ரத்த கிரியட்டின் அளவு பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, ரத்த சக்கரை அளவு பரிசோதனை, அல்ட்ராசவுண்டு வயிற்று ஸ்கேன், இலவச டாக்டர் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், பங்கேற்ற மக்களை வெஸ்ட்மெட் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இதில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.