புதுச்சேரி : லாஸ்பேட்டை அவ்வை நகரில் மகளிர் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நடந்தது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவ்வை நகரில் நடந்த வெள்ளி விழாவில், முதல்வர் ரங்கசாமி மகளிர் சங்கத்தின் சக்தி மலர் என்ற நுாலை வெளியிட்டார். அதனை மகளிர் பேரவை தலைவர் ரெஜினா பேகம் பெற்றுக்கொண்டார். சங்க தலைவி பார்வதி வரவேற்றார். சங்கத்தின் நிறுவனர் லட்சுமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் உமாசேகர், செயலாளர் பங்காரம்மாள் இணை செயலாளர் உமாபார்வதி, லலிதா, தமிழரசி, தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.