குரோம்பேட்டை : குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன், 53, என்பவர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில், தன் லோடு ஆட்டோ திருடுபோனதாக புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.
இதில், லோடு ஆட்டோவை திருடியது, துாத்துக்குடியைச் சேர்ந்த பார்வதிராஜா, 35, குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆர்வின், 24, என்பது தெரியவந்தது.
இருவரையும், குரோம்பேட்டை போலீசார், கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement