புதுச்சேரி : 'புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, வரும் 5ம் தேதி புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது' என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இயங்குகிறது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
புத்த பூர்ணிமா மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புத்த பூர்ணிமாவை யொட்டி வரும் 5ம் தேதி, ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும். அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.