அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய ஒரு சில பழக்கவழக்கங்கள், நமக்கு உடல் ரீதியான பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றில் மிக முக்கியமானவை சாப்பிட்டதும் நாம் கடைபிடிக்கும் தவறான பழக்கங்கள். என்னென்ன விஷயங்களை நாம் சாப்பிட்டதும் செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
நோ காபி, டீ
சாப்பிட்டவுடன் காபி, டீ அருந்துவதை கட்டாயம் தவிருங்கள். இவை அமிலத்தன்மை கொண்டவை. இது உணவில் உள்ள புரதச்சத்தை கடினமாக்கி, செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்புண்டு.
சிக்கல் தரும் சிகரெட்
![]()
|
சிலருக்கு சாப்பிட்டவுடன் புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட அதிக கெடுதல் என்கின்றனர் மருத்துவர்கள். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமை சாப்பிட்டதும் புகைப்பிடிக்கும் போது உண்டாகும்.
உறக்கம் வேண்டாம்
சாப்பிட்ட உடனே தூங்குவது என்பது தவறான பழக்கம். உடலுக்குள் அனுப்பப்பட்டிருக்கும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு, உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் செரிமானம் நன்றாக நடைபெற்று சாப்பிட்ட உணவுகளில் இருக்கும் சத்துக்கள் சரிசமமாக உடல் உறுப்புகளுக்கு அனுப்பப்படும். சாப்பிட்டதும் தூங்கும்போது செரிமானத்துக்கு தேவையான ரத்தம் கிடைப்பதில்லை. இதனால் செரிமான கோளாறுகள் உண்டாக்குகின்றன. எனவே சாப்பிட்ட பின் உறக்கம் என்பது எப்போதுமே கூடாது. குறைந்தது 1-2 மணிநேர இடைவேளை அவசியம்.
குளிப்பது கூடாது
சாப்பிட்ட உடனே குளிக்கும் பழக்கம் அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. குளிக்கும்போது உடல் மற்றும் கை கால்களுக்கு ரத்த ஓட்டும் அதிகரிக்கும். இதனால் செரிமானத்துக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும். இது வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்படைய செய்வதுடன் உணவு நன்கு செரிமானமாவதையும் தடுக்கும்.
பழங்களை தவிர்த்துவிடுங்கள்
![]()
|
பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்தான். ஆனால் சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடும்போது, உடனே அது வயிற்றுக்குள் வாயுவை ஏற்படுத்தி வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின்பு பழங்களை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிக தண்ணீர் அருந்துவது
சாப்பிட்டவுடன் அதிகமான தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அதிக தண்ணீர் ஜீரணத்தை எளிதாக்கும் என்று நம்புவதே இதற்கு காரணம். ஆனால் உண்மையில் சாப்பிட்டவுடன் அதிக தண்ணீர் குடிப்பதால், ஜீரணத்துக்கு உதவும் சுரப்பு நீர் நீர்த்துப்போக வாய்ப்புண்டு. மேலும் சாப்பிட்டவுடன் அதிக தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சலும் ஏற்படும். ஆகவே, சாப்பிடும்போது தேவைக்கு மட்டும் கொஞ்சமாக தண்ணீர் அருந்துங்கள்.
உடற்பயிற்சிகள் வேண்டாம்
![]()
|