பெங்களூரு: கர்நாடகா தேர்தல் நெருங்கி வருவதால் பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி, முளபாகிலு எனும் பகுதிக்கு பிரசாரம் மேற்கொள்ள காங்., தலைவர் சிவகுமார் ஹெலிகாப்டர் மூலம் பயணித்தார்.
அப்போது வானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று ஹெலிகாப்டரில் மோதியதில் முன்புற கண்ணாடி சேதமடைந்தன. தொடர்ந்து, விமானி பாதுகாப்பாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. கார் மூலம் சிவகுமார் கோலார் சென்றடைந்தார்.
@2br@@
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement