வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பெட்ரோனஸ், கேட்டர் பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை, தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மலேஷியாவை சேர்ந்த பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர்களுடன் மட்டும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், ஜனாதிபதியின் தமிழகம் வருகை, மதுரையில் திறக்கப்பட உள்ள கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.