வால்பாறை:குட்டியுடன் வந்த யானை சுற்றுலா பயணயரின் வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது கேரளா மாநிலம் சாலக்குடி. இந்த வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நான்கு சுற்றுலா பயணியர் பொள்ளாச்சி வழியாக வால்பாறைக்கு நேற்று முன்தினம் வந்தனர். மாலை மளுக்கப்பாறை வழியாக சாலக்குடிக்கு வாகனத்தில் செல்லும் போது குட்டியுடன் வந்த யானை வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்டது.
பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து யானை வன பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தில் வானத்தில் பயணம் செய்த நான்கு சுற்றுலா பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.