திவால் ஆனது கோ பர்ஸ்ட் விமான நிறுவனம்: சேவைகள் நிறுத்தம்

Updated : மே 02, 2023 | Added : மே 02, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
மும்பை: முன்னணி விமான நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடியா குழுமத்துக்கு சொந்தமான கோ பர்ஸ்ட் விமானம் நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட
Bankruptcy Go First Airline: Stoppage of Services  திவால் ஆனது கோ பர்ஸ்ட் விமான நிறுவனம்: சேவைகள் நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: முன்னணி விமான நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடியா குழுமத்துக்கு சொந்தமான கோ பர்ஸ்ட் விமானம் நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால், மே.3,4, மற்றும் 5 ஆகிய மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுவதாக அறிவித்துள்ளது.


latest tamil news


இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, கோ பர்ஸ்ட் நிறுவனம் 59 விமானங்களை இயக்கி வருகிறது. தற்போதைய நிலையில் விமானத்துக்கு தேவையான இன்ஜின்கள் உள்ளிட்டவைகளை அமெரிக்காவின் பிராட் அன்ட் விட்னி என்ற நிறுவனம் சப்ளையை நிறுத்தி வைத்ததால், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் 28 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதையடுத்து கடும் நிதி நெருக்கடியை சந்திக்க தொடங்கியது.

இந்நிலையில் தான் வாடியா குழுமம் டில்லியில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்துக்கான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

Rajarajan - Thanjavur,இந்தியா
03-மே-202305:25:41 IST Report Abuse
Rajarajan இப்படித்தான் பெரும்பாலான அரசு நிறுவனங்களும் / பொதுத்துறை நிறுவனங்கள் திவால் நிலையில் தான் இயங்கிக்கொண்டுள்ளன. அதை இழுத்து மூடுவதும் இல்லை / தனியாருக்கு கொடுப்பதும் இல்லை. விளைவு ?? பொதுமக்களுக்கு கூடுதல் விலைவாசி மற்றும் வரி சுமை. நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் / பொதுத்துறை நிறுவனங்களின் லாபக நஷ்ட கணக்கை ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் முன்பு வைத்தால் அப்போது தெரியும், நாடு ஏன் விலைவாசி தாங்காமல், பணவீக்கத்தில் தவிக்கறதென்று.
Rate this:
Cancel
02-மே-202322:12:14 IST Report Abuse
ஆரூர் ரங் இருக்கவே இருக்காங்க கேடி பிரதர்ஸ். பழைய மசாலா கம்பெனி கிட்ட கடன் பத்திர செட்டில்மென்ட் ஏகப்பட்ட அமவுண்ட்டை இப்பதான் வாங்கி கொழுத்திருக்காங்க . இப்போ ராக்கெட் கம்பெனி கூட வாங்கத் தயார் ( மருமகனும் 😇கேபிள் பிசினெஸ் ஆரம்பிக்கிறதாலே வேற வழிலதான் இன்வெஸ்ட் பண்ணணும் )
Rate this:
Cancel
02-மே-202321:58:15 IST Report Abuse
பாமரன் இங்கே சம்பந்தமில்லாம டீம்காவை சீண்டும் பகோடாஸ்... ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை நடத்த முடியாமல் நம்ம கம்பெனி ஆள் அஜய் சர்மா கேடி பிரதர்ஸ்கிட்ட வித்துட்டு அப்புறம் அவனுவகிட்ட இருந்தே 2014ல கம்பெனி ஆட்சி வந்ததும் எப்படி திரும்ப வாங்கினாருன்னு கேட்டா பெப்பேபேபேபன்னு சொல்லுங்க...🤭🤭 டிசைன் அப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X