உடுமலை:கொங்கல்நகரம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
உடுமலை கொங்கல்நகரம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்., 18ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, கொங்கல்நகரம், புதுார், ராவணாபுரம், லிங்கம்மாவூர் கிராமங்களில் இருந்து பக்தர்கள், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தனர். இன்று, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை, (5ம் தேதி) காலை, 9:00 மணி முதல் அபிேஷக பூஜையும், மாலை, 6:00 மணிக்கு நந்தாதீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.