சென்னை:தமிழக அரசே, பெட்ரோல், காஸ் விலை நிலவரத்துக்கு ஏற்ப, கி.மீ., கட்டணத்தை தினமும் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான வசதிகளை உடைய புதிய டிஜிட்டல் மீட்டர்களை அரசே வழங்க வேண்டும்.
பயணியரும், ஆட்டோ ஓட்டுனரும் பயன்பெறும் வகையில், புதிய செயலியை அரசே உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், வரும் 9ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த போராட்டம் நடக்க உள்ளதாக, ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.