பசவனகுடி,-ஜாமினில் வெளியே வந்து போலீஸ் நிலையத்தில் ஆஜராகாததால், 11 பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமறைவு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பனசங்கரி இட்டமடுவை சேர்ந்தவர் ரோகித், 26. கொள்ளை, வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
இவர் மீது பசவனகுடியில் மூன்று, ஜெயநகர், ஜே.பி.நகர், சி.கே.அச்சுக்கட்டில் தலா இரண்டு, சித்தாபுரா, ஹனுமந்த நகரில் தலா ஒரு வழக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு வழக்கில் கைதானார். ஜாமினில் வெளியே வந்தார்.
அதன்பின் போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை. தலைமறைவாக இருந்தார். அவருக்கு எதிராக 11 பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பசவனகுடியில் வசிக்கும், நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். இதுபற்றி அறிந்த பசவனகுடி போலீசார், நண்பர் வீட்டின் அருகில் கண்காணித்தனர். அங்கு வந்த ரோகித்தை சுற்றிவளைத்து கைது செய்தனர்.