மைசூரு,-எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் விசுவாசி ஒருவர், தன் தலையை மொட்டை அடித்து, 'சித்து ஹேர்ஸ்டைல்' செய்து கொண்டார். மைசூரின், வருணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சித்தராமையா போட்டியிடுகிறார். இவரது ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருணாவின், சித்தராமனஹுன்டியில், சித்தராமையா விசுவாசி ஒருவர் தன் தலையை மொட்டை அடித்து, சித்து பெயரை ஹேர்Hஸ்டைல் அமைத்துக் கொண்டார். காங்கிரஸ் தொண்டரான இவர், கை சின்னத்தையும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரையும், தலையில் எழுதியுள்ளார்.
பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில், இவரது தலையை அனைவரும் ஆர்வத்துடன் கவனிக்கின்றனர். சிலர் இவரது தலையை மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வேகமாக பரவுகிறது.