பல்லடம்: பல்லடம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார், 26; பல்லடம் பஸ் ஸ்டாண்டில் மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.
பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்த வடிவேல், 33; பச்சாபாளையத்தை சேர்ந்த சுரேஷ் 42 ஆகியோர் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். நேற்று முன்தினம், குடி போதையில், வினோத்குமாரின் கடைக்கு சென்ற இருவரும், மொபைல்போனுக்கு சார்ஜ் போடச்சொல்லி கேட்டனர். வினோத்குமார் மறுக்கவே, போதையில் இருந்த இருவரும் சேர்ந்து வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வினோத்குமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்லடம் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.