கோவை: மழையின் காரணமாக, திருச்சி ரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை கொட்டியது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும், மழைநீர் தேங்கியது. இதனால், பல இடங்களில் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது.
மழைநீர் தேங்கிய பகுதிகளில், மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் மூலம் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலையும், பீளமேடு, ராமநாதபுரம், புலியகுளம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், கனமழை பெய்தது.
கோவை - திருச்சி ரோட்டில், சிங்காநல்லுார் குளம் அருகே ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பள்ளத்தில் கார் ஒன்றும் சிக்கியது. அருகிலிருந்தவர்கள் காரை மீட்டனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.