கோவை: கோவை மாநகரில் உள்ள சட்டம் - ஒழுங்கு, புலனாய்வு பிரிவு, மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 254 மனுக்கள் பெறப்பட்டன.
மனுதாரர்கள் அழைத்து விசாரிக்கப்பட்டதில், 131 புகார்தாரர்கள் எதிர்தரப்பினருடன் சமாதானமாகி விட்டனர்.
56 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. 27 மனுக்களில், ஆவணங்கள் சார்ந்து, விசாரணை நிலுவையில் உள்ளது. 30 மனுக்களில், மனுதாரர்கள் கோர்ட் வாயிலாக தீர்வு பெறுவதாகத் தெரிவித்தனர்.
மனுக்கள், உரிய காவல்நிலையங்களுக்கு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.