கோவை: கான்கிரீட் கர்டர்கள் அமைக்கும் பணி நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு - தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, கான்கிரீட் கர்டர்கள் அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதையடுத்து, திருச்சி - பாலக்காடு டவுன்(16843) இடையே இயக்கப்படும் ரயில், நாளை, திருச்சி - ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இடையே மட்டும் இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படாது.
இதே போல், பாலக்காடு - திருச்சி(16844) இடையேயான ரயில், வரும் 6ம் தேதி, ஈரோட்டில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும். பாலக்காடு - ஈரோடு இடையே இயக்கப்படாது. நாகர்கோவில் - கோவை(16321) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை நாகர்கோவிலில் இருந்து ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து கோவைக்கு இயக்கப்படாது.