ஸ்ரீவில்லிபுத்துார்:சிவகாசி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர்கள் இருவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசோனை, 26, இவர் 2019 ஜனவரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நண்பர் சுப்புராஜ், 26, உடந்தையாக இருந்தார்.
சிவகாசி மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் இருவருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.