ஆன்மிகம்
நரசிம்மர் ஜெயந்தி விழா: லட்சுமி நரசிம்மருக்கு ஏகதின லட்சார்ச்சனை - காலை 6:00 முதல் 11:00 மணி வரை. மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், வாத்தியார் கந்தன் தெரு, சூளை.
சித்திரை பெருவிழா: நடராஜர் தரிசனம் - காலை 6:00 மணி. தீர்த்தவாரி - காலை 10:30 மணி. திருக்கல்யாணம் - இரவு 7:00 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.
வசந்த விழா: கபாலீஸ்வரர் ஒன்பதாம் நாள் வசந்தவிழா - இரவு 7:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
பிரம்மோற்சவம்: தொட்டி உற்சவம் - காலை, காமதேனு வாகன காட்சி - இரவு. இடம்: செவ்வேள் கோட்டம், வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் கோவில், சாமி பிள்ளை வீதி, சூளை.
பிட்சாடனார் உற்சவம்: சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு இசைஞானியார் குருபூஜை: அபிஷேகம் - மாலை 6:30 மணி, திருவேட்டீஸ்வர் பிட்சாடனார் உற்சவம் - இரவு 9:00 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.
இசைஞானியார் குருபூஜை: அபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.
அகண்ட நாம கீர்த்தனம்: உலக நலன், அமைதி வேண்டி. காலை 6:00 மணி முதல். இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 121, எட்டாவது குறுக்கு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. தொடர்புக்கு: 63742 26735.
சொற்பொழிவு: கந்தர் அலங்காரம் - எம்.வி.குமார், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
கூட்டு பிரார்த்தனை: அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - காலை 8:00 மணி முதல். இடம்: நித்ய தீப தர்மசாலை, வேளச்சேரி. தொடர்புக்கு: 94440 73635.
ஷீரடி சாய் வழிபாடு: சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி முதல். இடம்: ஆத்ம சாய் நாதர் கோவில், மீனாட்சி நகர், பள்ளிக் கரணை.
ராகவேந்திரர் வழிபாடு: அபிஷேகம் - மாலை 6:00 மணி. இடம்: ராகவேந்திரர் தெரு, ஆயில் மில் அருகில், ஜல்லடியன்பேட்டை.
ஆதிகேசவப் பெருமாள் உற்சவம்: கொடியேற்றம் - காலை. சிம்ம வாகனம் - மாலை. இடம்: பாஸ்யகார சுவாமி கோவில், ஸ்ரீபெரும்புதுார்.
கொடியேற்றம்: பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் - காலை 5:00 மணி முதல் 5:45 மணி வரை. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
� பொது �
இலவச கோடை கால வகுப்பு: சம்ஸ்கிருத பாரதி, இந்து இறை பணி மன்றத்தின் சார்பில், 7 முதல் 15 வயது சிறார்களுக்கான சுலோகம், கதைகள், சம்ஸ்கிருத வகுப்பு. மதியம் 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: 45/19, ஜுபிளி ரோடு, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 99401 22883.
சென்னை விழா: சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்ள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா. காலை 11:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்: தீவுத்திடல், சென்னை.
ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத் சங்கத்தின், தொடர் கலை நிகழ்ச்சி நிரல். நேரம்: மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.