சிதம்பரம்,--மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மணலூர் லால்புரம் மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் சிவராஜன், 34.; சுமை தூக்கும் தொழிலாளி. சிவராஜனுக்கும், மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் செல்வஅரசிக்கும் திருமணம் நடந்து சில ஆண்டுகள் ஆகிறது.
கணவன் -மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததால், சில நாட்களுக்கு முன் செல்வஅரசி, அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த சிவராஜன், எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை உறவினர்கள் மீட்டு, சிதம்பரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.
இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.