புதுச்சேரி-புதுச்சேரி தாகூர் அரசு கல்லுாரியில் 'மொழி பெயர்ப்பில் இந்திய இலக்கியம்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
ஆங்கிலத் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, துறை தலைவர் கலா வரவேற்றார்.
தலைமை தாங்கிய முதல்வர் சசிகாந்ததாஸ், மொழிபெயர்ப்பு என்பது ஒரு பாலமாக செயல்பட்டு நாம் வேறு மொழிகளில் உள்ள அருமையான படைப்புகளை அறிய உதவுகிறது என்றார்.
புதுச்சேரி பல்கலைக்கழக ஆங்கில துறை பேராசிரியர் கிளமெண்ட் லுார்து, 'ஆர்.கே. நாராயணனின் ராமாயணம் உரைநடையில் ஒரு காவியம்' என்ற தலைப்பில் பேசினார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் பிரேமா ஜெகன்நாதன், தெற்காசிய ராமாயணங்களின் ஒப்பீட்டு ஆய்வு தலைப்பில் பேசினார்.
பேராசிரியர் லில்லி அருள்ஷர்மிளா நன்றி கூறினார்.