பழநி : பழநியில் சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பழநி கோதைமங்கலம் பெரிய ஆவுடையார் கோயில், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், பழநி இடும்பன் கோயில், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சன்னதி வீதி, வேளீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
*கோபால்பட்டி கபாலீஸ்வரர் சமேத கற்பகாம்பாள் கோயிலில் பிரதோஷ விழா பூஜைகள் நடந்தது. மூலவர் கபாலீஸ்வரருக்கு 16 வகை அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ,அலங்கார பூஜைகள் நடந்தது. நந்தீஸ்வரர் ,கற்பகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் ,காம்பார்பட்டி 1008 சிவலிங்கம் கோயில் , அய்யாபட்டி ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம், வேம்பார்பட்டி சிவன் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.