சோழவந்தான் : சோழவந்தான் கோயில் பூக்குழி பிரம்மோற்ஸவ விழாவில் திரவுபதி அம்மன் வேடமணிந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் இரவு அம்மன் கூந்தல் விரித்து நான்கு ரத வீதியில் வலம் வந்தார்.
துரியோதனன் படுகளம் நோக்கி ஆவேசத்துடன் வந்து வதம் செய்து, அவரது குடலை உருவி கழுத்தில் மாலையாக அம்மன் அணிந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று அம்மன் பூக்குழி மண்டகப்படி சென்றார். மாலையில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வந்தார். சங்கங்கோட்டை கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். செயல் அலுவலர் இளமதி, பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, கமிட்டி ஆலோசகர் முருகேசன் பங்கேற்றனர்.