கோயில்
சித்திரைத்திருவிழா - தீர்த்தவாரி உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, தேவேந்திர பூஜை, இரவு 10:15 மணி. கள்ளழகர் எதிர்சேவை: மூன்று மாவடி, காலை 6:00 மணி, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் மதியம் 12:00 மணி.
கொடி இறக்குதல்: திரவுபதை அம்மன் கோயில், சோழவந்தான், மாலை 4:00 மணி. கும்பாபிஷேகம்: நொண்டிச்சாமி கோயில், நொண்டிக்கோவில்பட்டி, மேலுார், காலை 10:30 மணி.
பக்தி சொற்பொழிவு
பாண்டுரங்க மாஹத்மியம்: நிகழ்த்துபவர்-ஜலேந்திரன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பொது
லீடு கோடை கால முகாம் நிறைவு விழா: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, மாத்ரு பூஜை, குழந்தைகள் நிகழ்ச்சி, தலைமை: சுவாமி சிவயோகானந்தர், பங்கேற்பு: பெண் தொழில் முனைவோர் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், காலை 10:45 மணி.
கோடை கால கேம்ப்: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 9:30 மணி.
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாள்: தலைமை பொறியாளர் மண்டல அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, காலை 11:00 மணி முதல் 1:00 வரை.
சித்திரைத் திருவிழா பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 வரை
குழந்தைகளுக்கான கோடை முகாம்: விடியல் வளாகம், கெனட் நகர், முத்துப்பட்டி, மதுரை, ஏற்பாடு: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், காலை 9:00 மணி முதல்.
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாள்: செயற்பொறியாளர் அலுவலகம், சமயநல்லுார், காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை.
கண்காட்சி
கோடை கால ஆடைகள், மெத்தை விரிப்புகள், அக்யுபிரஷர் விற்பனை: விஜய் மகால், 80 அடி மெயின் ரோடு, கே.கே. நகர், மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை.