கள்ளக்குறிச்சி : சின்னசேலம் தமிழ்ச் சங்கம், அறம் செய விரும்பு மற்றும் மும்மூர்த்திகள் கல்வி, சமூக சேவை அறக்கட்டளைகள் சார்பில் மே தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
புதிய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு உலக செங்குந்தர் பேரவை நிறுவனர் குணசேகரன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் தங்கராசு, பாண்டியன், குட்டிமாணிக்கம், சிவப்பிரகாசம், கணேசன், அருள் பாரத் முன்னிலை வகித்தனர்.
சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதைத் தம்பி வரவேற்றார். சிங்காரவேலர் படத்தை ஓய்வுபெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சரவணன் திறந்து வைத்து பேசினார்.
திருக்கோவிலுார் தலைமை ஆசிரியர் லில்லி ஏஞ்சல், குடியநல்லுார் நடுநாட்டு தமிழன் தொழிலாளர்கள் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.
ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அர்ஜூனன் சார்பில் சங்க வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பன்னீர்செல்வம், தங்ராசு, தண்டாயுதபாணி, கருணாநிதி, ராஜா, பாஸ்கரன் பங்கேற்றனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.