செஞ்சி : துருக்கியில் நடைபெறும் உலக கோப்பை கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரருக்கு தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 1 லட்சம் ரூபாயை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
சென்னை ஆவடியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் கிங் பாக்சிங் விளையாட்டில் மாநில, தேசிய அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அடுத்ததாக துருக்கியில் நடைபெறும் உலக கோப்பை கிங் பாக்கிங் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.
அவரை ஊக்குவிக்கும் வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 1 லட்சம் ரூபாயை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் வழங்கினார். இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், துணை அமைப்பாளர்கள் ரிஸ்வான், சதீஷ், விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.