செஞ்சி : செஞ்சியில் ஆக்ருத்தி இன்டர்நேஷனல் பள்ளியை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.
திண்டிவனம் ஸ்ரீதரம் கல்வி குழுமத்தின் சார்பில் செஞ்சியில் ஆக்ருத்தி இன்டர்நெஷனல் பள்ளி திறப்பு விழா நடந்தது. தரம் கல்வி குழுமத் தலைவர் பப்சாளா தலைமை தாங்கினார்.
செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடம் சர்வ ஜினாலய பரிபாலகர் ஸ்வஸ்தி ஸ்ரீ இலட்சுமிசேன மகா சுவாமிகள்- மற்றும் இளைய மகா சுவாமிகள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக பங்கேற்றனர்.
இதில் தரம் குழுமத்தின் நிர்வாகிகள், குடும்பத்தினர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.