புதுச்சத்திரம்: ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில் நாளை (5ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. 2, 3, 4ம் தேதிகளில் அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. சிறப்பு விழாவான திருக்கல்யாண உற்சவம் (5ம் தேதி) நாளை நடக்கிறது.
அதையொட்டி மாலை 3.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 4.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடக்கிறது.