சென்னை: நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா (69), கல்லீரல் பாதிப்பால் சென்னையில் நேற்று (மே 3) காலமானார். அலங்கரிக்கப்பட்ட பிரத்யேக வாகனத்தில் மனோபாலாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மனோபாலா உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இயக்குநர் மணிரத்னம், நடிகர் விஜய், அமைச்சரும், நடிகருமான உதயநிதி, அமைச்சர் மா சுப்ரமணியம், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மற்றும் மோகன், தாமு, சந்தானபாரதி, ஸ்டன்ட் சில்வா, சித்தார்த், மோகன்ராம், வித்யூலேகா, நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம், சிவகுமார், கவுண்டமணி, சுசீந்திரன், ஏஎல் விஜய், திரு, சினேகன், கார்த்திக் ராஜா, டெல்லி கணேஷ், சங்கர் கணேஷ், கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் முருகதாஸ், முரளி ராமசாமி, தினா, பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, ஆர்வி உதயகுமார், பேரரசு, ஹெச் வினோத், ராதாரவி, ஆர்யா, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.வின் ஹெச் ராஜா, சுந்தர் சி, எம்எஸ் பாஸ்கர், சசிகுமார், சூரி, ஷங்கர், லோகேஷ் கனகராஜ், சோனா, கோவை சரளா, மன்சூரலிகான், அப்புக்குட்டி, தேமுதிக., சார்பில் பிரேமலதா, சண்முக பாண்டியன், பார்த்திபன், வஸந்த் சாய், சாந்தனு, யோகிபாபு, விஜய்சேதுபதி, சரத்குமார், ராதிகா, ஒய்ஜி மகேந்திரன், மாரி செல்வராஜ், இமான் அண்ணாச்சி, லிங்குசாமி, ஆர்த்தி, கணேஷ், தாடி பாலாஜி மற்றும் சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.