வால்பாறை: மாற்றுத்திறனாளிகளுக்காக குறைதீர்க்கும் முகாம், வால்பாறை தாலுகா அலுவலகத்தில் வரும், 18ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பொள்ளாச்சி வருவாய் கோட்டம், வால்பாறை வட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில், வரும், 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து, உரிய நிவாரணம் பெறலாம். மேலும், முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.