திருப்பூர்: திருப்பூர் கோவில்களில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
n ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மற்றும் திருமுருகன்பூண்டியில் உள்ள ராகவேந்திரா பிருந்தாவனத்தில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. லட்சுமி நரசிம்மர் சன்னதியில் முன்னதாக கணபதி ேஹாமம் நடைபெற்றது. அதையடுத்து சிறப்பு அபிேஷகம்; பூர்ணாஹூதி கலசாபிேஷகம் நடந்தது.லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரம் நடத்தி மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் பஜனை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
n பல்லடம் ரோடு, இந்திரா நகரில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு உற்சவர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதிகாலை சுதர்சன ேஹாமம் நடந்தது.தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் சன்னதியில் நைவேத்தியம், சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்தார்.
n திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.