கோவை: கோவை மாவட்ட கூடைப்பந்து யூத் பிரிவு அணிக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு, இன்று மாலை 4:30 மணிக்கு, மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளித்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான யூத் பிரிவு மாவட்ட அணிக்கான தேர்வு, இன்று மாலை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
இதில், ஜன., 1, 2007ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்களின் பிறப்பு சான்றிதழை எடுத்து கொண்டு, மாலை 4:30 மணிக்கு மாநகாரட்சி மைதானத்தில் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.