விருதுநகர் : விருதுநகரில் கடந்த வாரம் வரை கிலோ ரூ.120க்கு விற்பனையான இஞ்சி ரூ.200க்கும், ரூ.40க்கு விற்ற கருவேப்பிலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து ரூ.80க்கும் விற்கப்பட்டது.
கோடை காலம் துவங்கியுள்ளதால் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் மல்லித்தழை வரத்து குறைந்துஉள்ளது, கிலோவிற்கு, 60 ரூபாய் உயர்ந்து, ரூ.100க்கு விற்கப்படுகிறது. இதன் விலை ரூ.200 வரை செல்லும் அளவு மார்கெட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதுகுறித்து விருதுநகர் மார்க்கெட்டை சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரி கார்த்திக் கூறியதாவது:
குடகு, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து விருதுநகர் வரும் இஞ்சியின் விலை உச்சத்தில் ஏறி கிலோ ரூ.200 வரை விற்பனையாகிறது. தற்போது கோடை வெயிலால் மல்லித்தழை விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட மல்லித்தழை அனைத்தும் அறுவடை செய்யப்பட்ட நிலையில் கிலோ ரூ. 100 வரை விலை உயர்ந்துஉள்ளது. இதுபோல் கருவேப்பிலையின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.80க்கு விற்கப்படுகிறது.