வேலுார்:வேலுார் அருகே, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியர் உடலுடன் உறவினர்கள் மறியல் நடத்தினர்.
வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத், 39. தனியார் நிறுவன இன்ஜினியர். இவர், கடன் வாங்கி, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில், 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
நிதி நிறுவன நிர்வாகிகள் தலைமறைவானதால், மனமுடைந்த பிரசாத், கடந்த 2ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வரும் நிலையில், பிரசாத் உடலுடன் அவரது உறவினர்கள் கல்வேரி கிராமத்தில் நேற்று முன் தினம் சாலை மறியல் நடத்தினர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.