கோவை: கோவை அவிநாசி சாலை கொடிசியா அருகே அமைந்துள்ள இஸ்கான் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நேற்று மாலை 4:00 மணிக்கு, மகா நரசிம்ம ஹோமமும் அதைத்தொடர்ந்து பகவான் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவையும், சிறப்பு சொற்பொழிவும் நடந்தது.
மஹா ஆரத்தி மற்றும் பிரசாத விருந்து நடந்தது. நரசிம்ம ஹோமத்தில், நரசிம்ம கவசமாக கருதப்படும் யந்திரத்தை பெற்றுக் கொண்டனர்.
சர்வதேச அளவில் இஸ்கான் அமைப்பு துவங்கியுள்ள, பசிக்கு உணவு திட்டம், ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியன்று, கோவையில் துவங்க உள்ளது.
கோவையின் பல பகுதிகளில் உள்ள, ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில், உணவு பொட்டலங்களை வாகனத்தில் எடுத்துச்சென்று, தினமும் விநியோகம் செய்யப்படும் என்று, இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.