கோவை: கேரளா ஸ்டோரி திரைப்படத்தை, கோவையில் திரையிடக்கூடாது என, கோவை கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், மனு அளிக்கப்பட்டது.
ஹிந்தியில் தயாராகி உள்ள, 'தி கேரளா ஸ்டோரி' படம், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட, 5 மொழிகளில் இன்று வெளியாக உள்ளது. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில், இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக, கண்டனம் கிளம்பியுள்ளது.
கேரளா ஸ்டோரி திரைப்படத்தை, கோவையில் திரையிட அனுமதிக்க கூடாது என, வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், கோவை கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். கட்சியின் மாவட்டத் தலைவர் முஸ்தபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.