கொலை வழக்கில் இருவர் கைது
பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கொலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். பழநி அடிவாரம் குரும்பபட்டியை சேர்ந்தவர் வடிவேலு 27. மே 3 ல் பாளையம் ரோட்டில் நடந்து வந்த போது , இருவர் வெட்டி கொலை செய்தனர். இதில் தொடர்புடைய அடிவாரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து 35, அழகாபுரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 29, ஆகியோரை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.
இருவருக்கு 3 ஆண்டு சிறை
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மச்சூரை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த வடிவேல்முருகன் 40, ஹரி கேந்திரன் 25, தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதன் கொடைக்கானல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி கார்த்திக், இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை ,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பெண்ணிடம் பணம் திருட்டு
வடமதுரை: பெரியகோட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரீட்டா 35. பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பியபோது, பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த 3 பேர் ரீட்டாவின் கவனத்தை திசை திருப்பி அலைபேசி, பணம் ரூ.3500 இருந்த பையை திருடி சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
வேடசந்துார்: முருநெல்லிக்கோட்டை ஊராட்சி ஆசாரிபுதுாரை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் 30. மன உளைச்சலில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.