சென்னை, சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 37. தனியார் டிராவல்ஸ் நிறுவன டிரைவர். இவர், 2019 ஜன.,23ல் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில், மோகன்ராஜ் உயிரிழந்தார்.
கணவரின் இறப்புக்கு, 48 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், மோகன் ராஜின் மனைவி, மகள் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டி.சந்திரசேகரன், இவ்வழக்கில் பிறப்பித்த தீர்ப்பு:
விபத்தை ஏற்படுத்திய நபர், அதிவேகம், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதே, விபத்துக்கு காரணம். எனவே, மனுதாரருக்கு 36.32 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.