குன்றத்துார், குன்றத்துார் அடுத்த மேத்தா நகரைச் சேர்ந்தவர் பத்மகுரு, 38, குன்றத்துார் முருகன் கோவில் செல்லும் சாலையில், 'சிக்கன்' கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அப்புவை சரமாரியாக வெட்டி தப்பினர்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குன்றத்துார் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு பத்மகுரு, அதே பகுதியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியரான குமரன் என்பவரை, குடும்பத் தகராறு காரணமாக வெட்டி கொலை செய்துள்ளார்.
தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த பத்மகுருவை, பழிவாங்கும் விதமாக, இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.