மதுரை:மதுரை மாவட்டம், இடையபட்டி வெள்ளிமலை முருகன் கோவில் காட்டில் சாம்பல் நிற தேவாங்குகள், அரிய வகை தென் மாநில முள்ளெலிகள் இருக்கின்றன. அவற்றை வேட்டையாடுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கடந்த மாதம் வெள்ளிமலை கோவில் காட்டில் மதுரை பன்னாட்டுச்சூழலியல் பேரவை கள ஆய்வு மேற்கொண்டது. அதில் சாம்பல் நிற மெலிந்த தேவாங்குகள், முள்ளெலிகள் இருப்பதை படம்பிடித்து காட்டினர்.
அரிய வகை விலங் கினமான முள்ௌலியை வேட்டையில் இருந்து காக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.