காரைக்கால்,--காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடந்தது.
காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பு பகுதியில் நிலவி வந்த மின்தடையை போக்கிட திருமுருகன் எம்.எல்.ஏ., முயற்சியினால், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதனை திருமுருகன் எம்.எல்.ஏ., நேற்று இயக்கி வைத்தார். இதன் மூலம் சுனாமி குடியிருப்பு பகுதியில் நிலவி வந்த மின்தடை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மின்துறை அதிகாரிகள். என்.ஆர்.காங்., கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.