விருத்தாசலம்-விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுாரில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏரியில் குறிப்பிட்ட இன மக்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் கோகுல கிறிஸ்டீபன் தலைமையில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். அங்கு வந்த அமைச்சர் கணேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்ற கிராம மக்கள் கலைந்து சென்றனர்.