கடலுார்,-கடலுார், பாதிரிக்குப்பத்தில் உள்ள கணேசன் டிரேடிங் கம்பெனி புதிய கிளை திறப்பு விழா கடலுார் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையம் மெயின்ரோட்டில் நடந்தது.
உரிமையாளர்கள் செந்தில்குமார், செல்வக்குமார் வரவேற்றனர். கணேசன் டிரேடிங் கம்பெனி நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலசுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி புதிய கிளையை திறந்து வைத்தார்.
விழாவில் தேவி காஸ் ஏஜன்சி பசுவலிங்கம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முதுநிலை மேலாளர் விக்னேஸ்வரன், தொழிலதிபர்கள் சக்திவேல், ராஜேந்திரன், மகாலிங்கம், சண்முகம், உதயகுமார், இளங்கோ, சுப்ரமணியன், பாதிரிக்குப்பம் ஊராட்சித் தலைவர் சரவணன், இன்ஜினியர்கள் சந்தான கிருஷ்ணன், சுரேஷ் பாபு, வரதராஜன், விஜய சங்கர், ரமேஷ், சுந்தர், மற்றும் தொழிலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து உரிமையாளர்கள் கூறுகையில், 'கடந்த 10 ஆண்டுகளாக டி.எம்.டி., கம்பிகள், சிமெண்ட் விற்பனையில் புகழ்பெற்று விளங்குகிறோம். டாடா டிஸ்கான், ஜே.எஸ்.டபுள்யூ, அக்னி, காமாட்சி, எம்.சி.ஆர்., ஆகிய முன்னணி நிறுவனங்களின் டி.எம்.டி., கம்பிகள், ஜே.எஸ்.டபுள்யூ, அல்ட்ராடெக், வலிமை ஆகிய நிறுவனங்களின் சிமெண்ட் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும்.
கடலுார் சுற்று வட்டாரப் பகுதிக்குள் 1 டன்னிற்கு மேல் டி.எம்.டி., கம்பிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி செய்யப்படும்' என்றனர்.