ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 100 நாள் வேலையை, 10,661 குடும்பத்தினர் நிறைவு செய்துள்ளனர்.
விவசாயம் நிறைந்த ஈரோடு மாவட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஒரு லட்சத்து, 16,376 குடும்பத்தினர் இணைந்துள்ளனர். நுாறு நாள் வேலை திட்டத்துக்கு அதிகமானவர்கள் செல்வதால், விவசாய பணி, நெசவு சார்ந்தை ஜவுளித்துறை பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. எனவே, அறுவடை காலங்களில் இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது வேளாண் பணிக்கு, அவர்களை அனுப்ப கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், 1 லட்சத்து, 61,265 குடும்பத்தை சேர்ந்த, 3,03,120 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து, 16,376 குடும்பத்தார் வேலை பெறுகின்றனர்.
இவர்களில், 1,431 பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள பணி, அரசு சார்ந்த பணிகளை வழங்குகிறோம். விவசாயிகள் கூறுவதுபோல, வேளாண் பணிக்கு இவர்களை அனுப்புவதும், பரிந்துரைப்பதற்கும் அரசு விதிகளில்
வழியில்லை.
இவ்வாறு கூறினர்.