ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் முதல் நாளான நேற்று இரவு, சித்தோடு டெக்ஸ்வெலியில் ஷாப்பிங் எக்ஸ்போ துவங்கியது. பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஷாப்பிங் எக்ஸ்போவை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். இன்று காலை, 8:30 மணிக்கு மாநாட்டுக்கான வணிக கொடி ஏற்றுதல் நடக்கிறது. நிர்வாகிகளை கவுரவப்படுத்தி, இசை நிகழ்ச்சி, தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மாநாடு துவங்குகிறது.
அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், அமைச்சர்கள் சு.முத்துசாமி, செந்தில்பாலாஜி, மூர்த்தி, சுப்பிரமணியன் பேசுகின்றனர். தொடர்ந்து மாநாடு
நடக்கிறது.