நாமக்கல்: நாமக்கல்லில், மகா மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் கோலாகலமாக நடந்தது.
நாமக்கல், தில்லைபுரம் மெயின் ரோடு, காமராஜ் நகரில் அமைந்துள்ள சிவகணபதி, மகா மாரியம்மன், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணி சுவாமி கோவிலில் கும்பாபி ேஷக விழா நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை கணபதி ேஹாமமும், மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, 7:35 மணிக்கு சிவகணபதி, மகா மாரியம்மன், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணி சுவாமி கோவிலிலும், 8:30 மணிக்கு மகா மாரியம்மன் கும்பாபி ேஷகமும் நடந்தது.
அதில் சுவாமி விக்ரகங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபி ேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.