வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: ஓட்டு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரஸ் ஆதரிப்பதாக கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெல்லாரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கர்நாடகாவை நம்பர் 1 ஆக்குவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் போலிக் கதைகளும், தடைகளும் மட்டுமே உள்ளன. நாங்கள் பஜ்ரங் தளத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை அவர்கள் விரும்பவில்லை.
பயங்கரவாதிகள் சதி வேலைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ‛தி கேரளா ஸ்டோரி' படம் அமைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஓட்டு வங்கிக்காக பயங்கரவாத்தை ஆதரிக்கிறது. பயங்கரவாதிகளின் முன் காங்கிரஸ் கட்சி, சரண் அடைகிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை போலியானது. மக்கள் முன் காங்கிரஸ் இரட்டை வேடம் போட்டு வருகிறது. மாநிலத்தில் வாக்காளர்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் போலி தேர்தல் அறிக்கை எல்லாம் கர்நாடக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கர்நாடகாவின் வளர்ச்சிக்குப் பதிலாக ஊழலுக்கு முன்னுரிமை அளித்தது.

கர்நாடகாவில் எடியூரப்பா மற்றும் பொம்மை தலைமையிலான இரட்டை என்ஜின் ஆட்சி, மூன்றரை ஆண்டுகளாக கர்நாடகாவில் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. சூடானில் உள்நாட்டுப் போர் நிலவுவதால், பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற மறுத்தாலும், இந்திய அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. காவேரி ஆபரேஷன் திட்டத்தின் கீழ், விமானம் மூலம் அப்பகுதியில் உள்ள மக்களை மீட்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.