வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: கோவிட் தொற்று பாதிப்பு குறித்த அவசர நிலை இனி வராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
.
கடந்த 2020-ம் ஆண்டு கெரோனா பெருந்தொற்று பாதிப்பு உலகை ஆட்டிப்படைத்தது. தொற்று பாதிப்புக்கு 69 லட்சம் பேர் பலியாயினர். 66 கோடிக்கும் அதிகமாேனோர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர். உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்தது.
கொரோனா வைரஸ் பரவல் துவங்கி மூன்று ஆண்டுகளை எட்டிய நிலையில், அதிக வீரியமுள்ள உருமாறிய 'ஒமைக்ரான்' வைரஸ்கள் கண்டறியப்பட்டாலும், இவற்றால் பெரிய பாதிப்பு இல்லை.
![]()
|
இந்நிலையில் கோவிட் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் அவசர குழு கூட்டம் உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ரோஸ் அதானோம் தலைமையில் கூட்டியது, கூட்டத்திற்கு பின் கூறப்பட்டதாவது,
கோவிட்-19 பாதிப்பால் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தாலும், அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிட்டுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொற்றுக்குப் பிந்தய பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிரமங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். கோவிட் வைரஸ் இன்னமும் இருக்கிறது. தொடர்ந்து மக்களை கொல்கிறது. அது ஒரு சவாலாகவே உள்ளது.
தற்போதைய அறிவிப்பின் முக்கிய நோக்கம் இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதைத் தெரிவிக்கவே. கடந்த 3 ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.