புதுடில்லி 'ஜெட் ஏர்வேஸ்' அலுவலகம், அதன் நிறுவனர் நரேஷ் கோயல் இல்லம் உட்பட ஏழு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மீது, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கனரா வங்கி, சி.பி.ஐ.,யில் புதிதாக புகார் அளித்தது.
![]()
|
அதில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கொடுத்த 848 கோடி ரூபாய் கடன் தொகையில், 538 கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்படவில்லை என்றும், அதில் பல மோசடிகளை அந்நிறுவனம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மும்பையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நரேஷ் கோயல் வீடு, அவரது மனைவி அனிதாவின் அலுவலகம், அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் கவுரங் ஆனந்த ஷெட்டியின் வீடு உட்பட ஏழு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement